கேரளாவில் பழங்குடி இளைஞரை துப்பாக்கியால் சுட்டு வனப்பகுதியில் புதைத்த நண்பர்கள்

A man is pointing a gun directly at the lens.

கேரளாவில் பழங்குடி இளைஞரை துப்பாக்கியால் சுட்டு, வனப்பகுதியில் புதைத்த நண்பர்கள் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், பைசன்வாலி பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன். பழங்குடியினத்தை சேர்ந்த இவர், தனது நண்பர்களுடன் கடந்த 27 ஆம் தேதி காட்டு பகுதிக்கு வேட்டையாட சென்றுள்ளார். பின்னர் நண்பர்கள் வீடு திரும்பிய நிலையில், மகேந்திரன் மட்டும் வீடு திரும்பவில்லை. மகேந்திரன் வழிமாறி சென்றிருக்கலாம் என்று நண்பர்கள் கூறியதை அடுத்து, பழங்குடியின மக்கள் காட்டுக்குள் தேடி வந்துள்ளனர்.

மேலும் இதுகுறித்து ராஜாக்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்துள்ளனர். அப்போது சந்தேகத்தின்பேரில், மகேந்திரனின் நண்பர்கள் இருவரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையில் அவர்கள் கூறும்போது, வேட்டையாடுவதற்காக கையில் இருந்த நாட்டு துப்பாக்கியால் சுட்டபோது, தவறுதலாக மகேந்திரன் உடலில் பட்டதால் அவர் பலியானதாகவும், வெளியே தெரிந்தால் பிரச்சினை வரும் என்பதால் வனப்பகுதியில் குழிதோண்டி மகேந்திரனை புதைத்தாக அவர்கள் தெரிவித்தனர். இதனை அடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 1 = 4