கெலமங்கலம் அருகே யானை மிதித்து ஒருவர் பலி

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிகோட்டை வட்டம், கெலமங்லம் அருகே பச்சப்பன்ட்டி என்ற கிராமத்தை சேர்ந்தவர் (வெங்கடேஷ், 65 வயது) தந்தை பெயர் முனியப்பா) வெங்கடேஷ் காலை இயற்கை உபாதை கழிப்பதற்க்காக 5 மணியளவில் கிராமத்தை தாண்டி நடந்து சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக இருந்த ஒற்றை காட்டு யானையை திடீரென பார்த்த வெங்கடேஷ் என்ன செய்வது என்று அறியாமல் தடுமாறியதற்குள் காட்டு யானை வெங்கடேஷ்யை, தன் தும்பிக்கையால் தூக்கி வீசியதில் இதில் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார்.

அந்த வழியாக வந்த பொதுமக்கள், வனத்துறையினருக்கும் கெலமங்கலம் காவல் நிலையத்திற்க்கும் தகவல் கொடுத்தனர், உடனடியாக வந்த அதிகாரிகள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்ற போது, தகவலறிந்த ஊர் பொதுமக்கள், சம்பவ இடத்திற்க்கு வந்து உடலை எடுக்கவிடாமல் தடுத்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இச்சம்பவம் அறிந்த தளி சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் அவர்கள் வனத்துறையினரிடம் அலைப்பேசியில் தொடர்பு கொண்டு இறந்து போன வெங்கடேஷ் குடும்பத்திற்கு, அரசாங்கம் நிவாரண தொகை கொடுத்தால் மட்டும் போதாது, குடும்பத்தில் ஒருவருக்கு அரசாங்க வேலை தரவேண்டும் என்று கோரிக்கை வைத்த பின் பொது மக்களிடம் தொடர்பு கொண்டார். அதன்பின் பொதுமக்கள் கலைந்து சென்றார்கள்.  பின்னர் வெங்கடேஷ் உடலை கைப்பற்றி தேன்கனிகோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர்.

பின், தளி சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் அவர்கள் மருத்துவமனைக்கு நேரடியாக சென்று வெங்கடேஷ் மனைவி, மகன்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அத்துடன் மாவட்ட வன அதிகாரி கார்த்தியாயினி பாதிக்கப்பட்ட குடும்பத்தாருக்கு முதல் தவணையாக ஐம்பதாயிரம் ரூபாய்க்காகன காசோலை வழங்கப்பட்டது.

இதில் கெலமங்கலம் ஊராட்சி ஒன்றிய சேர்மேன் கேசவமூர்த்தி, தளி ஊராட்சி ஒன்றிய சேர்மேன் சீனிவாசலு, தளி ஒன்றிய கவுன்சிலர் பிரசாந்த், கெலமங்கல ஒன்றி செயளாலர் ஜெயராமன், பச்சப்பனட்டி பஞ்சாயத் தலைவர் கிருஷ்ணப்பா, ஜவளகிரி வன அதிகாரி சுகுமார் மற்றும் வனத்துறை ஊழியர்கள் உடன் இருந்தனர்.

Similar Articles

Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 2 = 8

Advertismentspot_img

Instagram

Most Popular

x
error: Content is protected !!
%d bloggers like this: