தமிழகத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரையிலான நகைக் கடன் தொகை தள்ளுபடி செய்யப்படும் என்று சட்டசபையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை அடகு வைத்து பெற்ற கடன்தொகை தள்ளுபடி செய்யப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 110 விதியின் கீழ் சட்டசபையில் கூறியதாவது:-
கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை பெறப்பட்ட நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும். தகுதியின் அடிப்படையில் மட்டுமே நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் . உண்மையான ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் நகைக் கடன் தொகை தள்ளுபடி செய்யப்படும்.
கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்றவர்கள் குறித்து 51 விதமான தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன. கூட்டுறவு வங்ககளில் நகைக்கடன் பெற்றவர்களின் விவரங்கள் கடந்த ஒரு மாத காலமாக சேகரிக்கப்பட்டது.மேலும், கூட்டுறவு சங்கம் சார்பாக யாருக்கெல்லாம் கடன் தள்ளுபடி என்ற விவரம் விரைவில் வெளியிடப்படும் என்று கூறினார். ரூபாய் 6000 கோடி அளவிற்கான நகை கடன் தள்ளுபடியை முதலமைச்சர் ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்தார்.