கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி சேர்க்கை நீட்டிப்பு புதுக்கோட்டை மாவட்ட அதிகாரி அறிவிப்பு

கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி சேர்க்கைக்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளதாக புதுக்கோட்டை மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் தனலட்சுமி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

2022-23 ஆம் ஆண்டிற்கான முழு நேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிக்கான விண்ணப்பங்களை பயிற்சி நிலையத்திற்கு நேரில் வந்து அல்லது கீழ்கண்ட அலைபேசி எண்களான 63811 46217, 94860  45666, 97888 25339 தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, முதல்வர், பட்டுக்கோட்டை கூட்டுறவு தொழில் பயிற்சி நிலையம், தாலுக்கா அலுவலகம் அருகில், முத்துப்பேட்டை ரோடு, நாடிமுத்து நகர் & அஞ்சல், பட்டுக்கோட்டை என்ற முகவரிக்கு தபால் அல்லது கூரியர் மூலம் நாளை செப்டம்பர் 7 மாலை 5.30 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

இப்பயிற்சியில் சேர குறைந்தபட்சம் 17 வயது நிரம்பி இருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு இல்லை. பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கும் பட்டயப் படிப்பு படித்தவர்களும் இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். இப்யிற்சியில் கூட்டுறவு பட்டயப் பயிற்சி, கணினி மேலாண்மை மற்றும் நகை மதிப்பீடு உள்ளிட்ட மூன்று பயிற்சிகளும் வழங்கப்படுகிறது. என அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

82 + = 92