கூட்டுறவு நூற்பாலை தினக்கூலி தொழிலாளர்களை வஞ்சிக்கின்ற ஆலை – நிர்வாகத்தையும் தமிழக அரசையும் கண்டித்து சிஜடியூ ஆர்ப்பாட்டம்.

புதுக்கோட்டை மாவட்டம் துரையரசபுரம் மாவட்ட கூட்டுறவு நூற்பாலை தினக்கூலி தொழிலாளர்களை வஞ்சிக்கின்ற ஆலை நிர்வாகத்தையும் வேடிக்கை பார்க்கும் தமிழக அரசையும் கண்டித்து புதுக்கோட்டை டிஸ்ட்ரிக்ட் டெக்ஸ்டைல்ஸ் ஒர்க்கர்ஸ் யூனியன் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்டத்தலைவர் எல்.அலாவுதீன் தலைமை வகித்தார், துணைத்தலைவர் மாணிக்கம் முன்னிலை வகித்தார், சாய்ராம் செக்யூரிட்டி சர்வீஸ் நிறுவனத்துடன் ஏற்படுத்தியுள்ள ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும், 480 நாட்கள் பணி முடித்த என்எம்ஆர் தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும்.

தினக்கூலி தொழிலாளர்களை வஞ்சிக்கும் போக்கை நிறுத்தி கொள்ள வேண்டும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக நிர்வாகத்திடம் மனு கொடுக்க செல்லும் தினக்கூலி தொழிலாளர்களை சிஜடியூ சங்கத்திலிருந்து விலகினால்தான் மனுவை வாங்குவேன் என்று மிரட்டும் ஆலை மேலாளர், டையம் கிளார்க் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சிபிஎம் மாவட்ட செயலாளர் எஸ்.கவிவர்மன், சிஜடியூ மாவட்ட செயலாளர் ஏ.ஸ்ரீதர், மாவட்ட செயலாளர் கர்ணா, உள்ளிட்டோர் பேசினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் மாவட்ட குழு உறுப்பினர் தங்கராஜ், ஒன்றிய செயலாளர் தென்றல் கருப்பையா, வாலிபர் சங்க நிர்வாகிகள் கௌதம்பாண்டி, கோபால் சங்கர், வழக்கறிஞர் சேக்ராவுத்தர் மற்றும் நூற்பாலை தொழிலாளர்கள் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

7 + 3 =