
தென்காசி மாவட்டம் குற்றாலம் மெயின் அருவி பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் கிடந்தது. அதனை கைப்பற்றிய போலீசார் அது பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தென்காசி மாவட்டம், குற்றாலம் மெயின் அருவி பகுதியில் உள்ள கார் பார்க்கிங் பகுதியில் உள்ள பிள்ளையார் கோவில் பின்புறம் அடையாளம் தெரியாத ஒரு ஆண் பிணம் கிடப்பதாக குற்றாலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவல் அறிந்த குற்றாலம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜகுமாரி, உதவி ஆய்வாளர் விஜய் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குற்றாலம் மெயின் அருவி கார் பார்க்கிங் பகுதியில் உள்ள பிள்ளையார் கோவில் பின்புறம் சுமார் 50 மீட்டர் தொலைவில் கிடந்த ஆண் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்து கிடந்த சுமார் 45 வயது மதிக்கத்தக்க, 5 அடி உயரமுள்ள அந்த நபர் யார்? அவர் எப்படி இறந்தார்? என்பது பற்றி போலீசார் தீவிர விசாரணை செய்து வருகிறார்கள். இந்தச் சம்பவம் குற்றாலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து குற்றாலம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜகுமாரி வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றார்.