குறுவை சம்பா நெல் பயிர்களுக்கு பயிர் காப்பீடு வழங்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பாரதிய கிசான் சங்கம் சார்பில் குறுவை சம்பா நெல் பயிர்களுக்கு பயிர் காப்பீடு வழங்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது.

கடந்த 2021-ஆம் ஆண்டிற்கான குறுவை மற்றும் சம்பா ஆகிய நெற்பயிர்களுக்கு மத்திய மாநில அரசுகள் இன்சூரன்ஸ் தொகை இதுவரை வழங்காததை கண்டித்தும். மேலும் இந்த ஆண்டு குறுவை நெற்பயிருக்கு இன்சூரன்ஸ் கிடையாது என்று தமிழக அரசு அறிவித்து விட்ட நிலையில் சம்பா பயிருக்கு பயிர் இன்சூரன்ஸ் செய்ய உத்தரவிட வேண்டும் என்று கூறியும், விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை உறுதி செய்யக்கூறியும், மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி, தரங்கம்பாடி தாலுகாக்களில் இதுவரை காவிரி கடைமடை பகுதியில் காவிரி நீர் வந்து சேரவில்லை என்று கூறியும்,  உடனடியாக கடைமடை பகுதிவரை தண்ணீர் வந்து சேர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாரதிய கிசான் சங்கம் சார்பில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கூட்டத்தின் தலைவர் இலங்கேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாவட்ட ஆட்சியரிடம் அளித்தனர்.