கும்பகோணம் அருகே தொப்புள் கொடி கூட அறுக்கப்படாத நிலையில் ஆற்றில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை

கும்பகோணம் அருகே செம்பியவரம்பல் கிராமத்தில் உள்ள அரசலாற்றில் பிறந்த ஆண் குழந்தை இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கும்பகோணம் அருகே செம்பியவரம்பல் கிராமத்தில் அரசலற்றில் நேற்று காலை அக்கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் குளிக்க சென்றுள்ளனர். அப்போது ஆற்றில் புதிதாக கட்டப்பட்டுள்ள தடுப்பு அணையில் பிறந்த ஆண் குழந்தை ஒன்று இறந்த நிலையில் மிதப்பதை அவர்கள் கண்டுள்ளனர். உடனடியாக அவர்கள் கூச்சலிடவே, அப்பகுதி மக்கள் குழந்தையை மீட்டுள்ளனர். கரையோரத்தில் எடுத்துவந்து பார்த்தபோது, ஆண் குழந்தை தொப்புள் கொடி கூட அறுக்கப்படாமல், யாரோலோ ஆற்றில் வீசப்பட்டிருப்பது அவர்களுக்கு தெரியவந்துள்ளது.

தகவலறிந்த நாச்சியார்கோவில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அக்குழந்தையை மீட்டு அரசு தலைமை மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து நாச்சியார்கோவில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். பிறந்த ஆண் குழந்தை சடலமாக ஆற்றில் கிடந்தது அப்பகுதி மக்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

97 − 91 =