கும்பகோணம் அருகே அரசு பேருந்தின் கண்ணாடியை உடைத்தவர் கைது

கும்பகோணம் வட்டம், முத்துப்பிள்ளை மண்டபத்தில் அரசு பேருந்து பின்புறம் கண்ணாடியை உடைத்தவரை போலீசார் கைது செய்தனர்.

காரைக்காலிருந்து கும்பகோணத்தை நோக்கி அரசு பேருந்து ஒன்று நேற்று மாலை வந்தது. இதில் சுப்பிரமணியன் ஒட்டுநராகவும், நடத்துனராக இளமாறன் (55) என்பவரும் பணியில் இருந்தனர். இப்பேருந்தில் அம்பரத்தூர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து சுரேஷ் (45 ) என்ற பயணி ஏறியுள்ளார். மேலும் அவர் டிக்கெட் வாங்காமல் பயணித்ததாக கூறப்படுகிறது.

இதனையறிந்த, பேருந்தின் நடத்துநர் இளமாறன், முத்துபிள்ளை மண்டபம் பகுதியில் சுரேஷை கீழே இறக்கி விட்டுள்ளர். இதனால் ஆத்திரமடைந்த சுரேஷ், கற்களை வீசி, பேருந்தின் பின்புறம் கண்ணாடியை உடைத்துள்ளார்.

இதனிடையே, பேருந்து நடத்துநர் இளமாறன் அளித்த புகாரின் அடிப்படையில், நாச்சியார்கோயில் காவல் நிலைய போலீஸார் கும்பகோணம், மாதுளம்பேட்டைத் தெருவைச் சேர்ந்த சுரேஷை, கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 + 1 =