குமாரமங்கலம் மற்றும் மாத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு போட்டிகள்

குமாரமங்கலம் மற்றும் மாத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில்
பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு போட்டிகள் நடைபெற்றது.

மாவட்ட பேரிடர் மேலாண்மை துறை சார்பில் செப்டம்பர் மாதம் பேரிடர் விழிப்புணர்வு மாதமாக கொண்டாடப்பட்டு வருகிறது.அதன்படி குமாரமங்கலம் மற்றும் மாத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் வருவாய்த்துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை,ஓவியம் மற்றும் பேச்சுப்போட்டிகள் உள்ளிட்ட பேரிடர் விழிப்புணர்வு தொடர்பான பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது.

நிகழ்ச்சிக்கு கிராம நிர்வாக அலுவலர்கள் முத்துவேல் மற்றும் ஜோதிபிரகாஷ் தலைமை தாங்கினர். பள்ளி தலைமை ஆசிரியர்கள் முன்னிலை வகித்தனர். இதில் பேரிடர் காலங்களில் பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினர். அதனை தொடர்ந்து மாணவர்களிடையே நடத்தப்பட்ட விழிப்புணர்வு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கிராம நிர்வாக அலுவலர்கள் முத்துவேல் பரிசுகள் மற்றும் இனிப்புகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 2 = 8