குமரியில் பேச்சிப்பாறை அணையில் 3 ஆயிரம் கன அடி தண்ணீர் திறப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. மேலும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குமரியில் மழை நீடித்ததால் பேச்சிப்பாறை அணையிலிருந்து வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் கன்னியாகுமரியின் முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றான திற்பரப்பு அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

46 − 42 =