குன்றாண்டார்கோவில் பகுதியில் வீட்டு வழி கல்வி பயிலும் மாணவர்களை பார்வையிட்டு ஆலோசனை வழங்கல்

புதுக்கோட்டை மாவட்டம், குண்றாண்டார் கோவில்  ஒன்றியம் அண்ணாநகர் பகுதியில் வீட்டு வழி கல்வி பயிலும் மாணவர்களை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரெகுநாததுரை நேரில் பார்வையிட்டு ஆலோசனைகள் வழங்கினார்.

பின்னர்  வாலியம்பட்டி பஞ்சாயத்திற்கு உட்பட்ட ஆவுடையான் கோவில்பட்டி கிராமத்தில் உள்ள ஆறாம் வகுப்பு படிக்கும் ஆவுடையப்பன் என்ற மாற்றுத்திறனாளி  மாணவனை சந்தித்து பள்ளிக்கு செல்லாத விவரம் கேட்டறிந்து அவனை பள்ளிக்கு அனுப்ப  பெற்றோரிடம் கேட்டுக் கொண்டார். பெற்றோர்களும் இனி மேல் தொடர்ந்து பள்ளிக்கு அனுப்புவதாக தெரிவித்தனர். பின்னர் அம் மாணவனுக்கு அறுவை சிகிச்சை செய்வதற்கு உரிய ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்கினார். நிகழ்வின் போது  வட்டார வளமைய மேற்பார்வையாளர் அனிதா, சிறப்பாசிரியர் சோபியா ,பள்ளி ஆசிரியர் லாரன்ஸ் மற்றும் திருநாவுக்கரசு ஆகியோர்   உடன் இருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

84 + = 94