புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா புண்ணியவயல் ஊராட்சியில் உள்ள பழந்தாமரை கிராமத்தில் நாட்டின் 74 ஆவது குடியரசு தின விழாவை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
முன்னதாக புண்ணிய வயல் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பாக தேசிய கொடியைஊராட்சி மன்றத் தலைவர் ஏற்றி வைத்தார், பிறகு புண்ணியவயல் ஊராட்சி மன்றத் தலைவர் சுரேஷ்தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது, இக்கூட்டத்தில் ஒன்றிய அலுவலர்களும் ஊராட்சி உறுப்பினர்களும் கலந்து கொண்டனர், மேலும் பொதுமக்களும் சுய உதவி குழு பெண்களும் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துதல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் பற்றி விவாதித்தல், அண்ணா மறுமலர்ச்சி திட்டம் பற்றியும், தூய்மை பாரத இயக்கம்,சுகாதாரம் பற்றியும்கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை குறித்தும், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம், கலைஞர் வீடு வழங்கும் திட்டம், உள்பட பல்வேறு திட்டங்கள் பற்றியும் விவாதிக்கப்பட்டது. பிறகு குடிநீர், சாலைவசதி, ஏரி குளங்கள் மராமத்து உள்பட பத்திற்கும் மேற்பட்ட தீர்மானங்களும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது,நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ரஞ்சிதா உட்பட 8 வார்டு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர், இறுதியில் ஊராட்சி செயலர் சி.பெருமாள் கலந்து கொண்டு அனைவருக்கும் நன்றி கூறினார்.