குஜராத்தில் கொரோனா தொற்று அதிகரிப்பு: 8 நகரங்களில் இரவு நேர ஊரடங்கு அறிவிப்பு!!!

குஜராத்தில் கொரோனா தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளதால், 8 நகரங்களில் இரவு நேர ஊரடங்கை அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

குஜராத்தில் கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக முக்கிய நகரங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. வதோதரா, காந்திநகர், சூரத், ராஜ்கோட் உள்ளிட்ட 8 நகரங்களில் வரும் 15 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை இரவு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று குஜராத் அரசு அறிவித்துள்ளது.

குஜராத்தில் கடந்த  3 தினங்களாக தொற்று பாதிப்பு மெல்ல மெல்ல அதிகரிக்கத்தொடங்கியுள்ளது.  அம்மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 17 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. தொற்றில் இருந்து 14 பேர் குணம் அடைந்துள்ளனர். தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 165- ஆக உயர்ந்துள்ளது.