கீழமூவர்க்கரை கிராமத்தை சேர்ந்த 6 குடும்பங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளதை கண்டித்து தர்ணா போராட்டம்

சீர்காழி அருகே கீழமூவர்க்கரை கிராமத்தை சேர்ந்த 6 குடும்பங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளதை கண்டித்து. ஆறு குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் தாலுகா அலுவலக வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கீழமூவர்க்கரை மீனவ கிராமத்தை சேர்ந்தவர் நிலவன் இவர் மீன்பிடி தொழில் செய்து வருகிறார்.

 இவருடன் கர்ணன், ஜெயக்குமார், மாதவன், முரளி, ராஜா உள்ளிட்ட 5 பேர் உடன்பிறந்தவர்கள் ஆவர்கள். இந்நிலையில் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு அப்பகுதியில் அமைந்துள்ள கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலுக்கு வெங்கல தலான படிக்கட்டு அமைத்து  தனது பெயர் பொரித்து  அன்பளிப்பு செய்துள்ளார். இது தொடர்பாக கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் நடந்த கூட்டத்தில் பெயர் பொறித்து வைக்கக்கூடாது என அப்பகுதியில் உள்ள முக்கியஸ்தர்கள் கூட்டத்தில் கூறியுள்ளனர். இதில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக நிலவன் , கர்ணன், ஜெயகுமார் உள்ளிட்ட 6 குடும்பங்களை  ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளனர். மேலும் இந்த ஆறு குடும்பத்துடன் யாரும் பேச்சுவார்த்தை வைத்துக்கொள்ளக்கூடாது இதனை மீறினால் ரூ.50ஆயிரம் அபராதம் விதிக்கப்படும், கீழமூவர்க்கரையில் உள்ள கடைகளில் அத்தியாவசிய பொருட்களை அவர்களுக்கு வழங்க கூடாது உள்ளிட்ட கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.

இந்நிலையில் இரு தினங்கள் முன்பு நடந்த கோயில் திருவிழாவில் ஒலிபெருக்கி மூலம் ஆறு குடும்பங்களின் பெயரைப் படித்து ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துள்ளதாகவும் இவர்கள் கோயில் திருவிழாவில் கலந்து கொள்ள கூடாது என தெரிவித்துள்ளனர். இதனால் மனமுடைந்த ஆறு குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் சீர்காழி தாலுகா அலுவலகத்திற்கு வருகை புரிந்து. வட்டாட்சியரிடம் மனு அளித்து விட்டு வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 மேலும் வருகின்ற வெள்ளிக்கிழமை அன்று நடைபெற உள்ள கோயில் திருவிழாவில் தங்களை அனுமதிக்க வேண்டும் இல்லை என்றால் குடும்பத்துடன் சேர்ந்து தற்கொலை செய்து கொள்வதாக தெரிவித்துள்ளனர்.