கீழப்பழுவூரில் அதிமுக சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் நடுராஜ வீதியில், அதிமுக மாவட்ட மாணவரணி சார்பில் நடைபெற்ற, மொழிப்போர் தியாகிகளுக்கு நன்றி செலுத்தும் வீர வணக்க நாள் பொதுக் கூட்டத்துக்கு, மாவட்ட மாணவர் அணி செயலாளர் மற்றும் அரியலூர் நகர கூட்டுறவு வங்கித் தலைவர் ஓ. பி. சங்கர் தலைமை வகித்தார், திருமானூர் ஒன்றிய மாணவரணி செயலாளர் பாவேந்தன் வரவேற்று பேசினார்.
அதிமுக அரியலூர் மாவட்ட செயலாளர் மற்றும் முன்னாள் அரசு தலைமை கொறடா தாமரை எஸ் .ராஜேந்திரன், தலைமை அதிமுக பேச்சாளர்கள் நடிகர் ஏ .பி. ராஜேந்திர குமார், கரந்தை கண்ணன் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர்.
ஜெயங்கொண்டம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராம ஜெயலிங்கம், மாநில எம்ஜிஆர் இளைஞர் அணி துணைச் செயலாளர் அறிவு என்கிற சிவசுப்பிரமணியன், ஆண்டிமடம் ரீடு செல்வம், தங்க பிச்சமுத்து, வாசுகி ராஜேந்திரன், மாவட்ட பொருளாளர் அன்பழகன், ஒன்றிய செயலாளர்கள் சாமிநாதன், வடிவழகன், பாலசுப்பிரமணியன், செல்வராஜ், அசோகன், விக்ரம பாண்டியன், ராமச்சந்திரன், கல்யாணசுந்தரம், மாணவர் அணி நிர்வாகிகள் ஜபருல்லா, மலர்மன்னன், அலை பாஸ்கர், திருமலை, கார்த்திக், கீழப்பழுவூர் நகரச் செயலாளர் மருதமுத்து, அதிமுக பல்வேறு அணி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர், முடிவில் மாவட்ட மாணவரணி இணை செயலாளர் பாலமுருகன் நன்றி கூறினார்.