
தமிழ்நாடு சட்டப்பேரவையில் சிறுபான்மையினர் நல மானிய கோரிக்கைகளின் மீதான விவாதத்தின் போது, திருச்சி கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் கலந்து கொண்டு சிறுபான்மை இன மக்களுக்கான கோரிக்கைகளை முன்வைத்து பேசினார்: கோவில் பூசாரிகள், உலமாக்களுக்கு நலவாரியம் உள்ளது போல் கிறிஸ்தவ தேவாலய உபதேசியார் களுக்கு நலவாரியம் அமைக்கவும், மாவட்ட அளவில் ஆதிதிராவிடர் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையில் உள்ளது போல் சிறுபான்மையினர் நல வாரிய அலுவலர் நியமிக்கப்படவும், வன்னியர் கிறிஸ்தவர்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து சலுகைகள் கிடைத்திட நடவடிக்கைஎடு க்கவும்,அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவிகிதம் இட ஒதுக்கீடு போராடி பெற்றுத் தந்து தற்சமயம் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கும் இட ஒதுக்கீடு செய்தது போல் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தகோரியும் ,1991ல் ஜெயலலிதா அம்மையார் கொண்டு வந்த தடை ஆணையை நீக்கி சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனங்களில் மானியத்துடன் கூடிய ஆசிரியர் பணியிடங்களை அனுமதிக்க வேண்டும் எனவும்,சிறுபான்மையினரின் வழிபாட்டுத் தலங்களை புதிதாக கட்டுவதற்கும் பழமையான ஆலயங்களை மராமத்து பணிகளை மேற்கொள்வதற்கான தடைகளை நீக்கி 90 நாட்களுக்குள் அனுமதி வழங்க வேண்டும் என்றும், இந்து கிறிஸ்தவ இஸ்லாமிய பெருமக்களுக்கு மாவட்டந்தோறும் சுமார் ஐந்து ஏக்கரில் மயான கல்லறை அமைத்துதரவும், பல வருடங்களாக சிறையில் வாடும் இஸ்லாமிய தோழர்களை, மற்ற சிறைக் கைதிகளுக்கு வழங்கும் கருணையை அவர்கள் மீதும் காட்டி விடுதலை செய்ய வேண்டும் எனவும் இன்னும் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தார்.