கிருஷ்ணகிரி மாவட்ட அனைத்து கிராமியக் கலைஞர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கலைஞர்களின் நலன் காக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட தெருக்கூத்து கலைஞர்கள் வேடமணிந்து நடனமாடியபடி மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து கோரிக்கை மனுவினைக் கொடுத்தனர்.
இதில் அனைத்து கிராமியக் கலைஞர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கிராமிய கலைஞர்களின் நலன் காக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி மனுக்கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ்நாடு தெருக்கூத்து கலைலைஞர்களின், மாநில துணைப் பொதுச்செயலாளர் குருமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின் போது ஒசூர், ஊத்தங்கரை, மத்தூர், காவேரிப்பட்டினம், கிருஷ்ணகிரி, போச்சம்பள்ளி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட கிராமிய தெருக்கூத்து, கலைஞர்கள், வேடமணிந்து நடனமாடியபடி வந்தனர்.

பின்னர் நடனமாடிப் தெருக்கூத்து கலைஞர்களின் காவல் அரணாக செயல்பட்டுவரும் தமிழ்நாடு இயல் இசை நாடகமன்றத்தின் உறுப்பினராக செயல்பட்டு வரும் கலைமாமணி சோமசுந்தரம் அவர்களை தமிழக அரசு தமிழ்நாடு இயல் இசை நாடகமன்றத்தின் செயலாளராக மீண்டும் நியமிக்கப்பட வேண்டும்,
நலிவுற்ற நிலையில் உள்ள தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்திட வேண்டும், உள்ளிட்ட பல்வேறு அடிப்படை கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திரபானு ரெட்டி அவர்களை சந்தித்து தெருக்கூத்து கலைஞர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.அப்போது மாவடத் தலைவர் ஆறுமுகம், மாவட்டத் துணைத்தலைவர்கள் தேவேந்திரன், சித்தலிங்கைய்யா, மாவட்ட செயலாளர் சம்பத், மாவட்ட பெருளாளர் தங்கவேல், மாவட்ட துணைச் செயலாளர் சிவலிங்கம், சங்கத் தலைவர் சுப்பிரமணி, சங்கத்தின் துணைத்தலைவர் நடராஜ் உள்ளிட்ட அனைத்து தெருக்கூத்துக் கலைஞர்களும் கலந்துகொண்டார்கள்.