கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நிலத் தரகர்கள் சங்கத்தின் 18 வது ஆண்டு விழாவையொட்டி தூய்மைப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

கிருஷ்ணகிரி மாவட்ட நிலத் தரகர்கள் சங்க 18 வது ஆண்டு விழாவையொட்டி கிருஷ்ணகிரி நகரில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர் தங்கராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பணிபுரியும் தூய்மை  பணியாளர்கள் 100 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில்  மாவட்ட பொருளாளர் ராமநாதன், மற்றும் நிர்வாகிகள் தயாளன், விஸ்வா, தம்பா, சின்னத்தம்பி,  தங்கவேல், காந்திராஜ், முத்துகுமார், மற்றும் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.