கிராமப்புற மாணவர்களின் கொரோனா கால கற்றல் இடைவெளியை சரி செய்து வரும் இல்லம் தேடி கல்வி திட்டம்- பெற்றோர்கள் மகிழ்ச்சி

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தலைமையில், புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சே.மணிவண்ணன் மற்றும் புதுக்கோட்டை மாவட்டக் கல்வி அலுவலர் மஞ்சுளா ஆகியோர் வழிகாட்டுதலின் படியும், கந்தர்வகோட்டை வட்டாரக்கல்வி அலுவலர் வெங்கடேஸ்வரி ஆலோசனையின் படியும் இல்லம் தேடி கல்வித் திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

கந்தர்வகோட்டை  ஒன்றிய வட்டார வளமைய இல்லம் தேடிக்கல்வி ஒருங்கிணைப்பாளர் எஸ்.கே.சுரேஷ்குமார், ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் அ. ரகமதுல்லா ஆகியோர் வேலாடிப்பட்டி,ஒத்த குடியிருப்பு, உருவம்பட்டி ஆகிய இல்லம் தேடி கல்வி மையங்களை பார்வையிட்ட போது  தன்னார்வலர்கள் ரம்யா, பேபி ராணி, இந்துராணி,அரங்கநாயகி,ஜோதி ஆகியோர் மையங்கள் செயல்பாட்டில் இருந்தது.

 மையத்தின் செயல்பாடுகளை உற்று நோக்கி  ஆலோசனை வழங்கியதாவது, மழைக்காலங்களில் மையத்தை பாதுகாப்பாக நடத்த வேண்டும் எனவும், மாணவர்களுக்கு வாசிப்பு பயிற்சி தொடர்ந்து அளிக்க வேண்டும், மாணவர்களின் வருகை பதிவை ITK செயலில் பதிவேற்ற வேண்டும் எனவும்,பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிந்து அவர்களை பள்ளியில் சேர்க்க வேண்டும், தன்னார்வலர்களுக்கு இதுவரை  ஊதியம்  வரவில்லை என்றால் ITK செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும், மூன்றாம் கட்ட பயிற்சியில் கலந்து கொள்ள வேண்டும், ஒவ்வொரு மாதமும் நடைபெறும் பள்ளிமேலாண்மைக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் ஆலோசனை வழங்கினார், மாணவர்களின் அன்றாட நிகழ்வுகளை இல்லம் தேடி கல்வி செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும் கூறினார்.

மாணவர்கள் கதை, விளையாட்டு, பாடல்கள் மற்றும் எளிய அறிவியல் செயல்பாடுகள் மூலம் கற்று வருவது  பெற்றோர்கள் மத்தியில் பெரும்  பாராட்டைப் பெற்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

74 − 64 =