காதல் திருமணம் செய்துகொண்ட மருத்துவர்கள் பாதுகாப்பு கோரி, மதுரை தல்லாகுளம் மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் பகுதியைச் சேர்ந்த திவ்யாமோனிஷாவும் திருச்சியைச் சேர்ந்த லெனினும் ஒரே மருத்துவமனையில் பணிபுரிந்து வந்துள்ளனர். மாற்று சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இவர்கள் காதலுக்கு பெண் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதனால், கோயிலில் திருமணம் செய்துகொண்ட மருத்துவர்கள், காவல் நிலையத்தில் தஞ்சமடைந்து பாதுகாப்பு கோரி மனு அளித்தனர். மனுவை பெற்றுகொண்ட காவல் துறையினர், இருவரையும் பாதுகாப்பாக வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.