கால்நடைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு குறித்த தொலைபேசி வழி கலந்துரையாடல் நிகழ்ச்சி

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், மண்டல ஆராய்ச்சி மற்றும் புதுக்கோட்டை கல்வி மையம் மற்றும் ரிலையன்ஸ் அறக்கட்டளையின் சார்பில் கால்நடை வளர்ப்போர், தொலைபேசி வழியாக ஆலோசனைகள் பெறும் வகையிலான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், கால்நடைகளைப் பாதுகாப்பது மற்றும் பராமரிப்பதற்கான வழிமுறைகள், தீவன மேலாண்மை, தடுப்பூசியின் முக்கியத்துவம், கால்நடைகளில் ஏற்படும் சத்துக்குறைபாட்டை சரிசெய்வதற்கான வழிமுறைகள், கால்நடை பண்ணைகள் துவங்குவதற்கான ஆலோசனைகள், கால்நடைகளுக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கான முதலுதவி மற்றும் மரபுசார் மருத்துவம் குறித்து தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக புதுக்கோட்டை மண்டல ஆராய்ச்சி மற்றும் கல்வி மையத்தின், பேராசிரியர் மற்றும் தலைவர் தா.லூர்து ரீத்தா , இணைப்பேராசியர் அ.கலைக்கண்ணன் மற்றும் உதவிப் பேராசிரியர் ச.இளவரசன் ஆகியோர் விளக்கம் அளித்தனர். இந்நிகழ்ச்சியினை ரிலையன்ஸ் அறக்கட்டளை மேலாளர் அன்பழகன் தொகுத்தளித்தார்.

மேலும் கேள்வி பதில் நேரத்தில் விவசாயிகளின் சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கு விளக்கம் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ரிலையன்ஸ் அறக்கட்டளையின் திட்ட பணியாளர் முகமது சபீர் செய்திருந்தார். இந்நிகழ்ச்சியில் புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் தொலைபேசி வழியாக கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

72 − = 66