காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

அரசுப்பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

ரூ.33.56 கோடியில் காலை உணவு திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் மதுரையில் தொடங்கி வைத்தார். மதுரை ஆதிமூலம் மாநகராட்சி பள்ளியில் காலை உணவை மாணவர்களுக்கு ஊட்டிவிட்டு அவர்களுடன் அமர்ந்து உணவு அருந்தினார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இதையடுத்து உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின் காலை உணவு வழங்கும் திட்டம் வரலாற்றில் நிலைத்து நிற்கும் திட்டம் என மதுரையில் காலை உணவு தொடங்கி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். வாழ்நாளில் பொன்னாள் என்று சொல்லக்கூடிய அளவில் இந்த நாள் அமைந்துள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

பள்ளிக்கு பசியோடு வரும் பிள்ளைகளுக்கு முதலில் உணவு வழங்கிய பிறகு வகுப்பறைக்கு செல்லும் வகையில் இத்திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். மேலும் எத்தகைய நிதிச்சுமை வந்தாலும் பசிசுமையை போக்குவதே அரசின் இலக்கு என முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

அரசு பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு மெனு, திங்களன்று அரிசி, ரவை, சேமியா, கோதுமை ரவை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் உப்புமா மற்றும் காய்கறி சாம்பார்,  செவ்வாய்தோறும் ரவை, சேமியா, சோளம், கோதுமை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் காய்கறி கிச்சடி செய்து தரப்படும், புதன்தோறும் மாணவர்களுக்கு வெண் பொங்கல் அல்லது ரவை பொங்கல் மற்றும் காய்கறி சாம்பார் வழங்கப்பட உள்ளது, வியாழக்கிழமைகளில் அரிசி, ரவை, சேமியா, கோதுமை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் உப்புமா மற்றும் காய்கறி சாம்பார் தரப்படும், வெள்ளிக்கிழமைகளில் ரவை, சோளம், கோதுமை ரவை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் காய்கறி கிச்சடி மற்றும் ரவை கேசரி, சேமியா கேசரி தரப்படும். காலை 8.15 மணி முதல் 8.45 மணிவரை மாணவர்களுக்கு காலை உணவு பரிமாறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

18 + = 20