காலியாக உள்ள ஆண் போலீசார் பணியிடங்கள் : கூடுதல் பெண் போலீசாரை பணியமர்த்த ஏற்பாடு

ஒவ்வொரு காவல் நிலையத்திலும் 3 பெண் எஸ்.ஐ.க்கள், 10 பெண் போலீசாரை பணியமர்த்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

பெண் போலீசாரை கூடுதலாக பணியமர்த்த காலியாக உள்ள ஆண் போலீசார் பணியிடங்களில் நிரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது. கூடுதல் பெண் போலீஸ் மூலம் காவல் நிலையத்தில் 24 மணி நேரமும் பெண்களுக்கான உதவி மையத்தை செயல்படுத்தலாம் என பெண் போலீஸ் அதிகாரிகள் எண்ணிக்கை குறித்த கார்த்தி சிதம்பரத்தின் கேள்விக்கு ஒன்றிய உள்துறை பதில் அளித்துள்ளது. நாடு முழுவதும் பணியிலுள்ள 20,91,488 காவலர்களில் 2,15,504 பேர் பெண்கள் உள்ளனர் என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.