காற்றில் பறந்த லட்ச கணக்கான டாலர் கரன்சி – அள்ளி சென்ற அமெரிக்க மக்கள்

அமெரிக்க நாட்டில் உள்ள கலிபோர்னியாவின் சான் டியாகோ பகுதியில் உள்ளூர் வங்கியில் இருந்து பணத்தை FBI-க்கு எடுத்துச் சென்ற வாகனத்தின் கதவு திடீரென திறந்து கொண்டதால், அதிலிருந்து லட்ச கணக்கான அமெரிக்க டாலர் கரன்சி அனைத்தும் காற்றில் பறந்துள்ளது. 

வாகனத்திலிருந்து சாலையில் பணம் சிதறி கொண்டிருப்பதை கவனித்த வாகன ஓட்டிகள், ஆர்வ மிகுதியில் ஓடோடி வந்து அதனை அள்ளிச்செல்லும், வீடியோ உலக அளவில் வைரலாகி வருகிறது. வாகன ஓட்டிகள் அவர்களது வாகனங்களை நடுவழியில் நிறுத்திய காரணத்தினால் அந்த சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது.  

வாகனத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பண மூட்டைகள் சரிந்த காரணத்தினால் வாகனத்தின் கதவு திறந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் இந்த சம்பவத்தின் போது பதிவு செய்யப்பட்ட வீடியோ ஆதாரங்களை வைத்து பணத்தை திரும்பப் பெறும் முயற்சியில் போலீசார் இறங்கியுள்ளனர். மேலும் பணத்தை எடுத்தவர்கள் தானாக முன்வந்து கொடுக்கவும் என போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அதை செய்யாமல் போனால் கிரிமினல் குற்றம் அவர்கள் மீது பாயும் என எச்சரித்துள்ளனர். இந்த சம்பவத்தில் பணத்தை எடுத்து சென்ற இருவரை போலீசார் கைது செய்துள்ளனர் என தெரியப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

22 − = 19