காரைக்கால் ஆட்சியர் அலுவலகத்தில் தேசிய ஒருமைப்பாடு வார விழா

காரைக்கால் மாவட்ட நிர்வாகம் சார்பாக மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு வரும் 25ம் தேதி வரை தேசிய ஒருமைப்பாடு வார விழாவாக காரைக்கால் மாவட்ட நிர்வாகம் சார்பில் கொண்டாடப்படுகிறது.

அதை முன்னிட்டு, இன்று தேசிய ஒருமைப்பாட்டு தினமாக அனுசரிக்கப்பட்டு காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேசிய ஒருமைப்பாட்டு தினவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்திராகாந்தி உருவப்படத்திற்கு காரைக்கால் மாவட்ட ஆட்சியர் முகம்மது மன்சூர் தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்வில், துணை மாவட்ட ஆட்சியர் (வருவாய்) ஆதர்ஷ், காவல் கண்காணிப்பாளர்கள் சுப்ரமணியன் (தெற்கு) மற்றும் நித்தின் ரமேஷ் கவால் (வடக்கு) மேல்நிலை கல்வி துணை இயக்குனர் ராஜேஸ்வரி, முதன்மை கல்வி அதிகாரி ராஜசேகரன், நலவழித்துறை துணை இயக்குநர் சிவராஜகுமார் மற்றும் செய்தி மற்றும் விளம்பர துறை உதவி இயக்குனர்  குலசேகரன் மற்றும் அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள், சமாதான கமிட்டி உறுப்பினர்கள் கலந்து கொண்டு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

மேலும், மும்மத பிரார்த்தனை, தேசபக்திப் பாடல்கள் இசைத்தல் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு உறுதி மொழி எடுத்துக்கொள்ளப்பட்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

11 − 4 =