காரைக்காலில் மகளிர் தின விழா கொண்டாட்டம்

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பிறந்த தினத்தை முன்னிட்டு தேசிய ஒருமைப்பாட்டு வாரமாக கடைபிடிக்கப்பட்டு இன்று ஆறாம் நாள் நிகழ்வாக காரைக்காலில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையின் சார்பாக “மகளிர் தினவிழா” சமூகநலத்துறை சிறப்பு பள்ளி வளாகத்தில் கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்விற்கு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையின் குழந்தைகள் நலத்திட்ட அதிகாரி சத்யா  தலைமை வகித்தார். மேலும் திட்டம் மற்றும் ஆராய்ச்சி துறை துணை இயக்குனர் பாலசுப்பிரமணியம் மற்றும் சிறப்பு பேச்சாளர்கள் கலந்து கொண்டனர்.

அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் வட்டார வளர்ச்சித் துறை சேர்ந்த மாதர் சங்க உறுப்பினர்கள், நகராட்சி நிர்வாகத்தை சேர்ந்த சுயஉதவி குழுக்கள் என 200-க்கும் மேற்பட்ட மகளிர் கலந்து கொண்டு மகளிர் தின விழா கொண்டாடினர்.

சிறப்பு பேச்சாளர்கள் மகளிரின் திறமை, அவர்களுடைய பெருமை பற்றி பேசினர். நிகழ்வில் அங்கன்வாடி ஊழியர்களுக்கு நடந்த  பல்வேறு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

30 − 27 =