காரைக்காலில் புயல் எச்சரிக்கையால் 11 கிராம மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை!

வங்கக் கடலில் புதிய புயல் சின்னம் உருவாகி உள்ளதால் மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்லக் கூடாது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, காரைக்கால் மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகள் காரைக்கால் பகுதியை சேர்ந்த 11 கிராமங்களில் உள்ள மீனவர்களுக்கு யாரும் கடலுக்கு செல்லக் கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதையொட்டி காரைக்கால் மாவட்டத்தில் மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்லவில்லை. இப்பகுதியில் 8 ஆயிரம் மீனவர்கள் கடலுக்குச் செல்லாததால் விசைப்படகுகள் அனைத்தும் துறைமுக பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளது. பைபர் படகுகள் அரசலாற்றங்கரை மற்றும் துறைமுக பகுதியில் மீனவர்கள் நிறுத்தி உள்ளனர்.

காரைக்கால் பகுதி கடலில் இன்று வழக்கத்தை விட கடல் சீற்றம் அதிகமாக காணப்படுகிறது. எனவே, கடலுக்குச் சென்ற மீனவர்கள் உடனே கரை திரும்பும்படி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். அதன்படி, மீனவர்கள் தொடர்ந்து கரை திரும்பி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 5 = 1