காரைக்காலில் பண்பாட்டு இணக்க நாள் விழா மாணவர்களுக்கு துணை ஆட்சியர் அறிவுரை

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பிறந்த தினத்தை முன்னிட்டு தேசிய ஒருமைப்பாட்டு வாரமாக காரைக்காலில் கொண்டாடப்படுவதின் ஒரு பகுதியாக 5ம் நாளான இன்று கோவிந்தசாமி பிள்ளை அரசு உயர்நிலைப் பள்ளியில் கல்வித்துறை சார்பில், “பண்பாட்டு இணக்க நாள் விழா” நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு துணை ஆட்சியர் (வருவாய்) ஆதர்ஷ் தலைமை வகித்தார். மேல்நிலைக் கல்வித்துணை இயக்குனர் ராஜேஸ்வரி மற்றும் முதன்மை கல்வி அதிகாரி ராஜசேகரன் உள்ளிட்ட அதிகாரிகள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

துணை மாவட்ட ஆட்சியர் ஆதர்ஷ் பேசியதாவது:

இந்தியாவில் பல்வேறு மதங்கள், மொழிகள் இருந்தாலும், நாம் அனைவரும் இந்தியர் என்ற ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகிறோம். மொழியாலும், மதத்தாலும் நமக்குள் பிரிவினை வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக மாணவர்களாகிய நீங்கள் தான் இதற்கு முன் உதாரணமாக இருக்க வேண்டும்.

நீங்கள் படிப்பில் அக்கறை காட்டுவது போன்று, கலை நிகழ்ச்சிகளிலும், விளையாட்டிலும் ஆர்வம் காட்ட வேண்டும் என்றும் தினமும் நாளிதழ்களை படிக்க வேண்டும். ஒரு ஆங்கில நாளிதழை தவறாமல் படிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 54 = 64