காரைக்காலில் உலக கழிப்பறை தினம் கடைபிடிப்பு

புதுச்சேரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அறிவுறுத்தலின்படி காரைக்கால் வட்டார வளர்ச்சி அலுவலகம் மூலம் 27 கிராம பஞ்சாயத்துகளில் உள்ள மகளிர் சுய உதவி குழுக்கள் மற்றும் பொதுமக்கள் (ஸ்வச்தா ரன்)  ஒரு பகுதியாக உலக கழிவறை தினம் கொண்டாடப்பட்டது.

இதில், மகளிர் சுய உதவிக்குழுக்கள், மக்கள் சுத்தத்தை பற்றிய விழிப்புணர்வு உறுதி மொழியை எடுத்துக் கொண்டனர். பின்னர் கிராமத்தைச் சுற்றியுள்ள நிலம், நீர், காற்றினை சுத்தமாகவும் மாசுபடாமலும் பாதுகாப்போம். கழிவறைகளை பயன்பாட்டிற்கு பிறகு கைகளை சோப்பு போட்டு நன்கு கழுவுவோம்.

பிளாஸ்டிக் பைகளை ஒழிப்போம். துணி பைகளை மட்டும் பயன்படுத்துவோம். எங்களது வீட்டு கழிப்பறை கழிவு நீரை உறிஞ்சு குழி வழியாக பயன்படுத்துவோம் என பதாதைகள் ஏந்தி கோஷமிட்டு கொண்டு மாரத்தான் விழிப்புணர்வை மிக சிறப்பான முறையில் நடத்தினார்கள். இதில், கிராம மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள், முன்னாள் பஞ்சாயத்து தலைவர்கள், ஆசிரியர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள், மருத்துவர்கள் கலந்து கொண்டு கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இந்நிகழ்ச்சிக்கு வட்டார வளர்ச்சி அதிகாரி அருணகிரிநாதன் மற்றும் அலுவலக ஊழியர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 70 = 80