ஏப்ரல்-23 உலக புத்தக தினத்தை முன்னிட்டு காமராஜபுரம் கிளை நூலகத்தில் புதிய நூல்கள் கண்காட்சி மற்றும் உறுப்பினர்கள், புரவலர் மற்றும் பெரும் புரவலர் சேர்க்கை முகாம் வாசகர் வட்டம் சார்பில் காமராசர் சிலை அருகில் நடைபெற்றது.
ஏராளமான பொதுமக்கள், மாணவ, மாணவிகள் மற்றும் பலரும் கலந்து கொண்டு நூல்களை ஆர்வத்துடன் பார்வையிட்டு படித்து மகிழ்ந்தனர். 14 வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் அருணாச்சலம், கவிஞர்கள் பீர்முகம்மது,சுரேஷ்சூர்யா,அரங்கநாதன் நூலக நிர்வாகி கோ.சாமிநாதன் மற்றும் வாசகர் வட்ட தலைவர் எஸ். நடராஜன், வாசகர் வட்டதுணைத்தலைவர் மா.மீனாட்சி சுந்தரம் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இம்முகாமில் 65 உறுப்பினர்கள் மற்றும் 5 புரவலர்கள் இணைந்தனர். காமராஜபுரம் கிளை நூலகர் ஆ.கண்மணி நன்றி கூறினார்.


