காந்தி ஜெயந்தி அன்று ஆர்.எஸ்.எஸ். பிரமுகர்கள் பேரணி செல்வதில் என்ன தவறு: தெலுங்கானா ஆளுநர் தமிழிசை கேள்வி

தேச உணர்வு உள்ளவர்கள் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர்கள் காந்தி ஜெயந்தி அன்று பேரணி செல்வதில் என்ன தவறு உள்ளது என தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். எல்லோருக்கும் சமம் என்று சொல்லும் போது ஒரு இயக்கத்திற்கு மட்டும் எப்படி தடை விதிக்க முடியும் காந்தி ஜெயந்தி கொண்டாட ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுக்கும் உரிமை உள்ளது என்று குறிப்பிட்ட அவர், ஆர்.எஸ்.எஸ். நடத்தும் பேரணி, அமைதி பேரணி தான் என்று திட்டவட்டமாக கூறினார்.

எவ்வளவு விமர்சனம் வந்தாலும் மக்களுக்கான பணியை தொடர்ந்து செயல்படுத்துவேன் என்று அவர் கூறினார். புதுச்சேரியில் மருந்து தட்டுப்பாடு இல்லை என்று கூறிய தமிழிசை சவுந்தரராஜன், ஜிப்மரில் மருந்து தட்டுப்பாடு என ஒருசில கட்சிகள் வேண்டுமென்றே அரசியல் செய்து வருவதாக அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 4 = 3