காந்திநகர் நகராட்சி தொடக்கப்பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட்டம்

முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் பெருந்தலைவர் காமராசரின் பிறந்த நாளான இன்று கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது.

விழாவிற்கு பள்ளியின் தலைமையாசிரியர் மங்கையர்கரசி தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக அம்பிகா கல்வி அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் சந்திரா ரவிந்திரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி சிறப்பித்தார். நிகழ்வில் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் இராமு.தர்மராஜ், கல்விசார் சமூக ஆர்வலர் குட்டிச்சாமி,மற்றும் அம்பேத்கர் நற்பணி மன்ற பொருப்பாளர்கள் வழக்கறிஞர் ஜெகன், இதயம் முரளி, சமூக செயற்பாட்டாளர் கலியுக மெய்யர்,கார்த்திக், பாலா, யுவராஜ், நித்திஸ், பவித், அஜித், சூர்யா, மற்றும் பள்ளியில் காமராஜர் போன்று வேடம் அணிந்து பல்வேறு கலைநிகழ்ச்சிகளைமாணவர்கள் அரங்கேற்றினர்.