காதலியை பெட்ரோல் டேங்க்கில் உட்கார வைத்து கட்டிப்பிடித்தபடி பைக் ஓட்டிய வாலிபர்

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் காஜுவாடா வெம்பள்ளி நகரை சேர்ந்தவர் 25 வயது வாலிபர். சமதா நகரை சேர்ந்தவர் 22 வயது இளம்பெண். இவர்கள் இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர்.

இந்த நிலையில் காதலர்கள் இருவரும் நேற்று விசாகப்பட்டினம் ஸ்டீல் சிட்டி சாலையில் பைக்கில் சென்று கொண்டு இருந்தனர். அப்போது வாலிபர் தனது காதலியை பெட்ரோல் டேங்கின் மீது உட்கார வைத்துக்கொண்டு எதிரும் புதிருமாக கட்டிப்பிடித்தபடி வித்தியாசமாக பைக்கை ஓட்டி சென்றார். பட்டப்பகலில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்லும் நெரிசல் மிகுந்த சாலையில் காதலர்கள் இருவரும் வித்தியாசமாக உட்கார்ந்தபடி பைக்கில் செல்வதை கண்ட வாகன ஓட்டிகள் தங்களது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து ஸ்டீல் சிட்டி போலீசாருக்கு அனுப்பி வைத்தனர். வீடியோவை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாச ராவ், சப்-இன்ஸ்பெக்டர் சாமி நாயுடு ஆகியோர் காதலர்களை உடனடியாக மடக்கிப் பிடிக்க போலீசாருக்கு உத்தரவிட்டனர்.

இதையடுத்து போலீசார் காதலர்களை விரட்டிச் சென்று இருவரையும் போலீஸ் நிலையம் அழைத்து வந்து கலாச்சார சீர்கேடு ஏற்படுத்தும் விதமாக இப்படி பட்டப்பகலில் பைக்கில் செல்லக்கூடாது என அறிவுரை வழங்கினர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து காதலர்கள் இருவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

27 − 20 =