காட்டுமன்னார்கோவில் பகுதிகளில் பல பேரிடம் கைவரிசை காட்டி வந்த பலே திருடன் கைது

காட்டுமன்னார்கோவில் பகுதிகளில் பல பேரிடம் கைவரிசை காட்டி வந்த பலே திருடன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதிகளில் பல மாதங்களாக ஏடிஎம் வளாகத்தில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபரை போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில் சந்தேகத்தின் அடிப்படையில் மர்ம நபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் ஏடிஎம் வாசலில் நிற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதனடிப்படையில் அந்த வாலிபரை சுற்றி வளைத்த போலீசார் போலீஸ் நிலையம் கொண்டு வந்து விசாரணையில் ஈடுபட்டனர். அப்பொழுது அவன் ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்த சின்னவளையம் கிராமத்தைசேர்ந்த ஜோதி பாசு வயது 31 என்பதும் காட்டுமன்னார்கோயில் சேத்தியாதோப்பு புவனகிரி ஆகிய பகுதிகளில் வயதானவர்களை திசைதிருப்பி நகை, பணங்களை திருடி செல்வதும் தெரியவந்தது.

அதனைத்தொடர்ந்து காட்டுமன்னார்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து அவனிடம் இருந்து 5 பவுன் நகை மற்றும் மூன்று லட்சத்து 68 ஆயிரம் ரூபாய் ரொக்கம், இருசக்கர வாகனம் ஆகியவற்றை கைப்பற்றி குற்றவாளியை சிறையில் அடைத்தனர்.