காட்டுமன்னார்கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா முன்னிட்டு ஆலோசனை கூட்டம்

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் காவல் நிலையத்தில்,  சேத்தியாத்தோப்பு டி.எஸ்.பி சுந்தரம் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழா குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில்  இந்து முன்னணி, பாரதிய ஜனதா கட்சி மற்றும் பல்வேறு இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி  பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்கவோ, ஊர்வலம் நடத்தவோ கூடாது என்ற அரசு விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.

அதற்கு கொரோனா நோய் தொற்று பரவாத வகையில் அரசு விதிமுறைகளை கடைபிடித்து எங்களது வீட்டின் முன்பு சிலை வைத்து  கொண்டாடி கொள்கிறோம், மேலும் விநாயகர் சதுர்த்தி அன்று வினாயகர் கோவில்களை மட்டும்  பொதுமக்கள்  வழிப்பட திறக்க வேண்டும் என இந்து முன்னணி, பாஜகவினர் கேட்டுக்கொண்டனர். 

 முன்னதாக காவல் துறை சார்பில்  வினாயகர் சதுர்த்தி விழா அன்று கடைபிடிக்க வேண்டிய கட்டுப்பாடு, வழிமுறைகளை முக்கிய கடைவீதி பகுதியில் பொதுமக்களுக்கு துணை காவல் ஆய்வாளர் கார்த்திகேயன்  ஒலிபெருக்கி மூலம் எடுத்துரைத்தார். இதில்பொருப்பு காவல் ஆய்வாளர் அமுதா, துணை ஆய்வாளர் முத்துகிருஷ்ணன்,  சிறப்பு பிரிவு காவலர் நல்லதம்பி மற்றும் வீரநாரயண பெருமாள் திருக்கோயில் செயல் அலுவலர் ராஜ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.