காட்டிசேரியில் புதிய மின் மாற்றியை எம்எல்ஏ நிவேதா முருகன் திறந்து வைப்பு

மயிலாடுதுறை மாவட்டம் பொறையாறு அருகே காட்டுச்சேரி ஊராட்சியில் புதிய மின்மாற்றி தொடக்க விழா நடைபெற்றது.

காட்டுச்சேரி ஊராட்சி வடக்கு காலனி கிராமத்தில் நடைபெற்ற  புதிய மின்மாற்றி தொடக்க விழாவில் பூம்புகார் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான நிவேதா எம்.முருகன் கலந்து கொண்டு 100 கிலோ வாட் திறன் கொண்ட புதிய மின் மாற்றியை தொடங்கி வைத்து பேசினார்.

நிகழ்ச்சியில் காட்டுச்சேரி ஊராட்சி மன்ற தலைவர் விஜயலட்சுமி, சீர்காழி மின் செயற்பொறியாளர் சதீஷ்குமார்,  உதவி மின் செயற்பொறியாளர் அப்துல் வஹாப், உதவி பொறியாளர் அன்புசெல்வம், தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் அப்துல் மாலிக், மயிலாடுதுறை மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு அணி அமைப்பாளர் ஸ்ரீதர், திருவிடக்கழி ஊராட்சி மன்ற தலைவர் ராஜா மற்றும் காட்டுச்சேரி கிராம முக்கியஸ்தர்கள் பலர் உடனிருந்தனர்.