காஞ்சிபுரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் 2 பேர் பலி

மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதி 2 வாலிபர்கள் பலியானார்கள். மற்றொரு விபத்தில் தாய்-மகன் உயிரிழந்தார்.

சென்னையை அடுத்த தாம்பரத்தை சேர்ந்தவர் பார்த்திபன் (31). இவருடைய நண்பர் டேவிட் (30). இவர், விழுப்புரத்தை சேர்ந்தவர். இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர்-தாம்பரம் சாலையில் பட்டுநூல் சத்திரம் பகுதியில் சென்று கொண்டிருந்தனர்.அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரி, இவர்களது மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் பார்த்திபன், டேவிட் இருவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். விபத்தை கண்டதும், லாரியை அங்கேயே விட்டுவிட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார். இதுபற்றி ஸ்ரீபெரும்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 48 = 58