காங்கிரஸ் பேரியக்கத்தை தீரர் படத்திறப்பு திருநாவுக்கரசர் பங்கேற்கிறார்

மதன் ஜுவல்லரி பாலசுப்ரமணியனின் முதலாமாண்டு நினைவேந்தல் நாடாளுமன்ற உறுப்பினர் பங்கேற்க உள்ளார்

புதுக்கோட்டை முன்னாள் நகர காங்கிரஸ் தலைவர் அமரர் மதன் ஜுவல்லரி பாலசுப்ரமணியனின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் மற்றும் படத்திறப்பு விழா நாளை மறுநாள் ஆகஸ்ட் 3ஆம் தேதி காலை புதுக்கோட்டை தெற்கு மூன்றாம் வீதியிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற உள்ளது‌. இந்த விழாவில் முன்னாள் மத்திய,மாநில அமைச்சரும் திருச்சி நாடாளுமன்ற தொகுதிகள் உறுப்பினருமான சு. திருநாவுக்கரசர் அமரர் பாலசுப்ரமணியனின் படத்தை திறந்து வைத்து புகழ் அஞ்சலி செலுத்த உள்ளார். இந்த விழாவில் தமிழக அமைச்சர்கள் எஸ். ரகுபதி சிவ.வீ. மெய்யநாதன், சட்டமன்ற உறுப்பினர் புதுக்கோட்டை முத்துராஜா, அறந்தாங்கி ராமச்சந்திரன் மற்றும் காங்கிரஸ் அதன் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டு புகழ் அஞ்சலி செலுத்த உள்ளனர்.படத் திறப்பு விழாவையொட்டி விழாவிற்கான ஏற்பாடுகளை அமரர் பாலசுப்பிரமணியனின் மகன்கள் மதன் மற்றும் கண்ணன் குடும்பத்தார் செய்து வருகின்றனர். மறைந்த அமரர் பாலசுப்ரமணியம் நகர காங்கிரஸ் தலைவராக பதவி வகித்த போது மாநில மற்றும் தேசிய அளவில் கட்சி அறிவித்த அனைத்து நிகழ்வுகளிலும் பங்கேற்று கட்சியின் வளர்ச்சிக்காக அயராது பாடுபட்டு உள்ளார் கூட்டுறவு சங்கத் தலைவராகவும் பதவி வகித்து வந்த இவர் புதுக்கோட்டை நகைக்கடை சங்க தலைவராகவும் பதவி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 2 = 2