கவியரசு கண்ணதாசன் இலக்கிய சாரல் சார்பில் ஐந்தாம் ஆண்டு முப்பெரும் விழா புதுக்கோட்டையில் நடைபெற்றது

கவியரசு கண்ணதாசன் இலக்கியச் சாரல் பெருமையுடன் விளங்கும் ஐந்தாம் ஆண்டு முப்பெரும் விழா கவியரசு கண்ணதாசன் விருதுகள் வழங்கும் விழா, பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கும் விழா, புதுக்கோட்டையில் கடந்த இரண்டு நாட்களாக திலகர் திடல் அருகில் உள்ள ஸ்ரீ சங்கர மடம் திருமண மண்டபத்தில் கோலாகலமாக நடைபெற்றது.

கவியரசு கண்ணதாசன் இலக்கியச் சாரலின் ஐந்தாம் ஆண்டு முப்பெரும் விழாவின் முதல் நாளான சனிக்கிழமை காலை 9 மணிக்கு மாணவ, மாணவிகளுக்கான பாட்டுப் போட்டியின் இறுதி சுற்று போட்டிகள் நடைபெற்றன இந்த விழாவிற்கு அமைப்பின் இளைஞர் அணி தலைவர் வரவேற்புரையாற்றினார், கவிஞர் தங்கமூர்த்தி தலைமை வைத்தார். நகர மன்ற துணைத் தலைவர் லியாகத் அலி, விவசாய சங்கத்தின் நிர்வாகி தனபதி, பட்டிமன்ற பேச்சாளர் சரவணன் ஆகியோர் முன்னிலை வைத்தனர். முன்னாள் நகர் முதல் தலைவர் ராஜசேகரன், வேல்டு விஷன் மேலாளர் கிளாடிஸ் ஹட்சிபா ஆகியோர் போட்டியை தொடங்கி வைத்து சிறப்புரைற்றினர். ராதா நன்றி உரையாற்றினார். மாலையில் நடைபெற்ற விழாவிற்கு இலக்கியச் சாரலின் பொதுச் செயலாளர் மனிதத் தேனி திருமலை சேகர் வரவேற்புரைற்றினார். திலகவதியார் ஆதீனத்தின் தயானந்த சந்திரசேகர சுவாமிகள் தலைமை வகித்தார். நகர்மன்ற உறுப்பினர் செந்தாமரை பாலு, கருப்பையா உரக்கடை குமரேசன், ஊராட்சி மன்ற தலைவர் ஜெயலட்சுமி தமிழ்செல்வன், அரசு வழக்கறிஞர் பூங்குடி சிவா, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன், முன்னாள் நகர் மன்ற துணைத் தலைவர் நைனா முகம்மது, கலைஞர் தமிழ் சங்கத் தலைவர் சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நான் நிரந்தரமானவன் அழிவதில்லை கவியரங்கத்திற்கு முன்னாள் எம்எல்ஏ கவிச்சுடர் கவிதைபித்தன் தலைமை வகித்தார். கவிஞர்கள் இளங்கோவன் அறந்தாங்கி வெங்கடேசன், நேசன் மகதி, மாரி எட்வின், முபா,மகா சுந்தர், மாலதி ஆகியோர் கலந்து கொண்டு விவாதித்தார்கள். அமைப்பின் மகளிரணி துணைத் தலைவி சுகன்யா முரளிதரன் நன்றியுரையாற்றினார். இரண்டாவது நாளான இன்று நடைபெற்ற நிகழ்விற்கு அமைப்பின் பொருளாளர் குகானந்தன் வரவேற்பு உரையாற்றினார். அவைத் தலைவர் அஷ்ரப் அன்சாரி தலைமை வகித்தார். கவிஞர் ஜூவி, பிஎஸ்கே கருப்பையா, தம்பிராஸ் ராஜகோபால், சன் இண்டஸ்ட்ரீஸ், கதிரேசன் முத்து சுவாமி வித்தியாலயா முதல்வர் சக்திவேல் ஆகியோர் முன்னிலை வைத்தார்கள். பொன்மாரி கல்வி குழுமத்தின் சேர்மன் ராமதாஸ், சிபிஎஸ்இ மெட்ரிக் சங்கத்தின் தலைவர் ஸ்ரீதர், சத்ய ராம் ஜுவல்லரி ராமுகண்ணு, டாக்டர் பிரபாகர்தாஸ், லியோ பெலிக்ஸ் லூயிஸ், மேக் ஆட்டோ திருவேங்கடம், வெங்கடேஸ்வரா கல்வி குழுமத்தின் கதிரேசன், டாக்டர்கள்,முத்துகருப்பன், ராமமூர்த்தி, பொறியாளர் ராஜராஜன், வைரம்ஸ் பப்ளிக் ஸ்கூல் இயக்குனர் வில்சன் ஆனந்த், மகாத்மா காந்தி பேரவை தினகரன், ஆவின் பாலகம் சந்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு விருதுகளை வழங்கி சிறப்பித்தார். இன்றைய ஜோதிடத்தின் இந்திய வேத ஜோதிட ஆராய்ச்சி மையத்தின் தலைவர் ஜோதிட கலையரசு ஆதித்ய குருஜி கலந்து கொண்டு சிறப்புரைற்றினார். அமைப்பின் செயலாளர் மஞ்சுநாதன் நன்றி உரையாற்றினார். மாலையில் நடைபெற்ற விழாவில் அமைப்பின் செயலாளர் முரளிதரன் வரவேற்புரைற்றினார். தலைவர் ஜெயக்குமார் தலைமை வகித்தார். திமுக நகர செயலாளர் செந்தில் முன்னாள் தக்கார் வைரவன், தற்போதைய தக்கார் செந்தில்குமார், அரசு வழக்கறிஞர் செந்தில், நகராட்சி ஆணையர் நாகராஜன், முன்னாள் எம்எல்ஏ பெரியண்ணன் அரசு, ஊடகவியலாளர் குறிஞ்சிவாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காலங்களில் அவள் வசந்தம் என்ற தலைப்பில் ராதா மங்களேஸ்வரர் சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் செல்லப்பாண்டியன், எம்எல்ஏ முத்துராஜா, கவிஞர் கண்ணதாசன் குடும்பத்தாரின் பிரதிநிதி ஜெயந்தி கண்ணப்பன், புதுக்கோட்டை இலக்கியப் பேரவை முத்துசீனிவாசன், செல்வகுமார் ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தார்கள். கவிஞர் கண்ணதாசன் விருது பெற்று கவிஞர் தங்கமூர்த்தி, பதிப்பாளரும் எழுத்தாளருமான லேனா தமிழ்வாணன், ராயல் பாலிடெக்னிக் கல்லூரியின் சேர்மன் போஸ் ஆகியோர் ஏற்புரையாற்றினார்கள். அமைப்பின் துணைத் தலைவர் கருணைச்செல்வி நன்றியுரையாற்றினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

34 − = 31