கவர்னர் ஆர்.என்.ரவியுடன், புதிதாக பொறுப்பேற்றுள்ள டிஜிபி சங்கர் ஜிவால் சந்திப்பு

தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவியை புதிதாக பொறுப்பேற்றுள்ள டிஜிபி சங்கர் ஜிவால் சந்தித்தார்.

தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி.யாக கடந்த 2 ஆண்டுகள் சைலேந்திரபாபு திறம்பட பணியாற்றி வந்தார். அவர் கடந்த மாதம் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். இதையடுத்து புதிய போலீஸ் டி.ஜி.பி.யாக சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் தற்போது தமிழகத்தின் புதிய சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி.யாக சங்கர் ஜிவால் பதவியேற்று கொண்டதை அடுத்து சங்கர் ஜிவாலிடம் முழு பொறுப்பையும் சைலேந்திரபாபு ஒப்படைத்தார். இந்நிலையில் புதிய டிஜிபியாக பதவியேற்ற சங்கர் ஜிவால் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை இன்று சந்தித்தார். தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனாவை தொடர்ந்து டிஜிபி சங்கர் ஜிவால் கவர்னரை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.