கள்ளக்குறிச்சி வன்முறை: போலீசார் வாகனத்துக்கு தீ வைத்த நபர் கைது

கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் பள்ளியில் நடந்த வன்முறை தொடர்பாக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

 கள்ளக்குறிச்சி கணியமுரில் தனியார் பள்ளியில் மாணவி உயிரிழந்த நிலையில் அங்கு வன்முறை வெடித்தது. அப்பொழுது முகத்தில் துணியை காட்டியபடி இளைஞர் ஒருவர் கள்ளச்சாராயத்தை போலீசார் வாகனத்தில் ஊற்றினார். இதை தொடர்ந்து அந்த வாகனம் கொழுந்துவிட்டு எரிந்தது. இது தொடர்பான வீடியோ கடந்து ஜூலை 17-ம் தேதி வெளியானது.

இந்நிலையில், இந்த கட்சியை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். போலீசார் வாகனத்தில் மீது தீ வைத்த நபர் சின்ன சேலம் அருகே உள்ள மூங்கில்பாடி கிராமத்தை சேர்ந்த திருநாணம் என்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் பொது சொத்துக்களை சேதப்படுத்தியது வன்முறையில் ஈடுபட்டது உள்ளிட்ட 7 பிரிவுகளில் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த கலவரத்தில் தொடர்புடைய மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

97 − = 91