கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு 19-ம் தேதி உதயநிதி ஸ்டாலின் வருகை முன்னேற்பாடுகள் தீவிரம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடைபெற உள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வருகின்ற 19-ஆம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு வருகை தரவுள்ள விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை வரவேற்கும் விதமாக உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட எலவனாசூர்கோட்டை பகுதியில் சென்னை – சேலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலை அருகே தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் உருவபடம் பொறிக்கப்பட்ட ராட்சத பலூனை சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட செயலாளருமான உதயசூரியன், உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மணிக்கண்ணன், உளுந்தூர்பேட்டை ஒன்றிய குழுத் தலைவர் ராஜவேல் ஆகியோர் வானில் பறக்க விட்டனர்.

இதனைத் தொடர்ந்து இங்கு மிகப் பிரம்மாண்ட கொடி கம்பம் மற்றும் கலைஞரின் திருஉருவச்சிலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது, மேலும் அன்றைய தினம் விளையாட்டுத்துறை அமைச்சர் திமுக கொடியை ஏற்றி வைத்து கலைஞரின் திருவுருவுச் சிலையையும் திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெறுவதால், நிகழ்ச்சி ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.