கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரைப்போட்டி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவ,மாணவிகளுக்கு கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகள் வருகின்ற ஜூலை 07-ம் தேதி  கள்ளக்குறிச்சி அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். பள்ளி மாணவர்களுக்கானக் கட்டுரைப்போட்டி மற்றும் பேச்சுப்போட்டிகளில் பங்குபெற்று வெற்றி பெறும் மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசாக ரூபாய் 10 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூபாய் 7 ஆயிரம்,  மூன்றாம் பரிசாக ரூபாய் 5 ஆயிரம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.

கட்டுரைப்போட்டிக்கு தமிழ்நாடு உருவான வரலாறு என்ற தலைப்பிலும், பேச்சுப்போட்டிக்கு மொழிவாரி மாகாணமும் தமிழ்நாட்டில் நடைபெற்ற போராட்டங்களும், தமிழ்நாட்டிற்காக உயிர்கொடுத்த தியாகிகள், பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய தமிழ்நாடு, சங்கரலிங்கனாரின் உயிர்தியாகம், மொழிவாரி மாநிலம் உருவாக்கத்தில் தந்தை பெரியார், மொழிவாரி மாநிலம் உருவாக்கத்தில் மா.பொ.சி, எல்லைப் போர்த் தியாகிகள், கலைஞர் உருவாக்கிய நவீன தமிழ்நாடு ஆகிய ஏதேனும் ஒரு தலைப்புகளிலும் போட்டிகள் நடைபெறவுள்ளது.

மேலும், போட்டிகள் பற்றிய கூடுதல் தகவல்களுக்கு தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம். தொலைபேசி எண் : 9786966833 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பயிலும் மாணவ, மாணவிகள்  இப்பேச்சுபோட்டியில் பங்கேற்று பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 56 = 65