கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஜயகாந்த் பூரண குணமடைய வேண்டி தேமுதிக நிர்வாகிகள் சிறப்பு யாகம்

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் விஜயகாந்த்  உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று  சில தினங்களுக்கு முன் மருத்துவமனையில்  இருந்து வீடு திரும்பிய நிலையில் விஜயகாந்த் பூரண குணமடைய வேண்டி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தேமுதிக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக,

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் மற்றும் திருநாவலூர் ஒன்றியத்தில், மாவட்ட செயலாளர்கள் எல்.வெங்கடேசன், எஸ்.எஸ்.கருணாகரன் ஆகியோரின் ஆலோசனைப்படி திருக்கோவிலூர் மேற்கு ஒன்றியத்தின் சார்பாக ஒன்றிய செயலாளர் காமராஜ் தலைமையில், சந்தப்பேட்டை பைபாஸ் ஸ்ரீ வெக்காளியம்மன் திருக்கோவிலில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பூரண குணமடைய வேண்டி சிறப்பு யாகங்கள் நடத்தப்பட்டு, தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து நிர்வாகிகள் மற்றும் கழகத் தொண்டர்கள் பிரார்த்தனை செய்தனர். 

இவ்விழாவில் மாவட்ட பொருளாளர் கருணாகரன், நகரகழக செயலாளர் அஷ்ரப்அலி, மாநில செயற்குழு உறுப்பினர் பாலாஜி, மாவட்ட மாணவரணி செயலாளர் பன்னீர்செல்வம், மாவட்ட இளைஞரணி துணை செயலாளர்  ராஜீவ்காந்தி, மாவட்ட வழக்கறிஞர் துணை செயலாளர்கள் வெங்கடேசன், சத்திராஜ்,  ஒன்றிய துணைச் செயலாளர்கள்  நடராஜன், அசால்ட் ஆறுமுகம், மாவட்ட பிரதிநிதி ஏழுமலை, கேப்டன்மன்ற ஒன்றிய துணை செயலாளர்  சிவக்குமார், ஒன்றிய மாணவரணி துணை செயலாளர் சடையன்,  ஊராட்சி கழக செயலாளர் பாஸ்கர், கிளை கழக செயலாளர் சரவணன், ராஜி வினோத், ராஜேஷ் மற்றும் கழக நிர்வாகிகள், தொண்டர்கள்  கலந்து கொண்டனர்.

இதேபோன்று திருநாவலூர் கிழக்கு  ஒன்றிய  துணை செயலாளர் சேந்தநாடு சிவக்குமார் தலைமையில், சேந்தநாடு திரௌபதி அம்மன் ஆலயத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனை பூஜை நடைபெற்றது. 

இந்த சிறப்பு அபிஷேக ஆராதனை பூஜையில்  ஒன்றிய அவைத்தலைவர் ஜெய்சங்கர், ஒன்றிய துணைத் செயலாளர் ராஜகண்ணு, மாவட்ட பிரதிநிதி பஜித்ராமன், வெங்கட், ஆனந்த் மற்றும் கழக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள்  ஏராளமானோர் பூஜையில் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

32 − = 23