கள்ளக்குறிச்சி மாணவி மரண விவகாரம்: ஜாமீனை ரத்து செய்யக்கோரி ஸ்ரீமதியின் தாயார் தொடர்ந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் 26-ந்தேதி விசாரணை

கணியாமூர் தனியார் பள்ளி நிர்வாகிகளின் ஜாமீனை ரத்து செய்யக்கோரியும் மாணவி ஸ்ரீமதியின் தாயார் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார்.

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி ஸ்ரீமதி மர்ம மரணம் தொடர்பான வழக்கில் அந்த பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, முதல்வர் சிவசங்கரன், ஆசிரியைகள் ஹரிப்ரியா, கிருத்திகா ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் தங்களுக்கு ஜாமீன் அளிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். ஆனால் ஸ்ரீமதியின் பெற்றோர் ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கிடையே ஜாமீன் வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, 5 பேருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதனையடுத்து அவர்கள் விடுவிக்கப்பட்டனர். இந்தநிலையில் நிபந்தனை ஜாமீன் அளித்த ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக மாணவியின் தாய் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், ‘பள்ளி தாளாளர், செயலாளர், முதல்வர் உள்ளிட்டோருக்கு அளிக்கப்பட்ட நிபந்தனை ஜாமீனை ரத்து செய்ய வேண்டும்’ என்று கோரியுள்ளார்.இந்த வழக்கை நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.வி. நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு வருகிற 26-ந்தேதி விசாரணை க்கு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

69 − 68 =