கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் ஊராட்சி ஒன்றியம் நயினார்பாளையம் கிராமத்தில் நடைபெற்ற குடியரசு தின கிராமசபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷ்ரவன்குமார், கலந்து கொண்டார்.
கிராம சபை கூட்டங்களில் பொதுமக்கள் அதிகளவில் பங்கேற்று கிராமப்புற வளர்ச்சிக்கு பெரிதும் உதவிட வேண்டும். மேலும், நமது வீட்டை சுகாதாரமாக பேணி காப்பது போல் நமது கிராமத்தையும் தூய்மையாக பேணிக்காத்து பாரமரித்திட வேண்டுமென மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
பின்னர், கிராம சபை கூட்டத்தில் மகளிர் திட்டம் சார்பில் கிராம கூட்டமைப்பு நிதி மூலம் 4மகளிர் சுய உதவி குழுக்களுக்கு தலா 2 இலட்சம் வீதம் 8 இலட்சம் நிதி உதவியும், ஊரகவளர்ச்சித் துறையின் சார்பில் துப்புரவு பணியாளர்கள், தூய்மை காவலர்கள், மேல்நிலை நீர் தேக்கதொட்டி இயக்குபவர் என 18 நபர்களுக்கு சான்றிதழ்களும், சீருடைகளும், பரிசு பொருட்களும்,தோட்டக்கலை மற்றும் வேளாண்மைத்துறை மூலம் 12 பயனாளிகளுக்கு வேளாண்இடுபொருட்களும், சுகாதாரத் துறை மூலம் மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தின் கீழ் 2பயனாளிகளுக்கு மருந்து பெட்டகமும், 5 கர்ப்பிணி தாய்மார்களுக்கு முருங்கை கன்றுகளையும்மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மணி, திட்டஇயக்குநர் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் சுந்தர்ராஜன் உதவிஇயக்குநர்(ஊராட்சிகள்) ரத்தினமாலா, வேளாண்மை இணை இயக்குநர்வேல்விழி, மாவட்ட சமூகநலஅலுவலர் தீபிகா, சின்னசேலம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெகநாதன், இந்திராணி சின்னசேலம் வருவாய் வட்டாட்சியர் இந்திரா, ஊராட்சி செயலாளர், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.