
கள்ளக்குறிச்சி மாவட்டம்,கள்ளக்குறிச்சி நகராட்சியின் சார்பில்முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பருவமழை தொடங்குவதற்கு முன் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கழிவுநீர் வாய்க்கால் மற்றும் மழைநீர் வடிகால் பகுதிகள் தூர்வாரப்படுவதையும், மேலும், பொதுப்பணித்துறை சார்பில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான வாய்கால்களும் தூர்வாரப்படுவதையும் மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு செய்தார்.
மேலும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வெப்ப சலனம் காரணமாக நேற்று காலை முதல் தொடர்மழை பெய்து வருகிறது. இதனைத் தொடர்ந்து, கள்ளக்குறிச்சி நகராட்சிப் பகுதிகளில் மழைநீர் தேங்காமல், முறையாக வெளியேற்றம் செய்யப்படுவது குறித்து கள்ளக்குறிச்சி பேருந்து நிலையம் கிழக்குப் பகுதியில் உள்ள மாரியன்கோவில் தெரு, நகராட்சியின் முக்கிய வீதிகள் ஆய்வு
செய்யப்பட்டன. மேலும், நகராட்சி எல்லையையொட்டியுள்ள தென்கீரனூர் ஊராட்சி தொடக்கப்பகுதியில் மழைநீர் மற்றும் கழிவுநீர் விவசாய நிலங்களுக்கு உட்புகாமல் சென்றிட நகராட்சி மூலம் ஜேசிபி இயந்திரத்தை பயன்படுத்தி அடைப்பு ஏற்படாத வண்ணம் உடனுக்குடன் சீர்செய்திட அறிவுறுத்தப்பட்டது.
இதுபோன்ற மழைக் காலங்களில் கழிவுநீர் வாய்க்கால், மழைநீர் வடிகால்பகுதிகளை தினந்தோறும் ஆய்வு மேற்கொண்டு, உடனுக்குடன் நகராட்சிப் பணியாளர்கள் மற்றும் இயந்திரங்களை பயன்படுத்தி அடைப்பு ஏற்படாத வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மேலும், மழைநீர் சேமிப்பு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி, அனைத்து வீடுகள் மற்றும் அரசு அலுவலகங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை ஏற்படுத்திடவும், பழுதடைந்த மழைநீர்சேகரிப்பு அமைப்பினை புனரமைத்திடவும், கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்டஅனைத்து அரசு அலுவலகங்களையும் எழில்மிகு அலுவலகமாக பராமரித்திடவும் அறிவுறுத்தப்பட்டதது.
முன்னதாக நகராட்சி எல்லை முடியும் பகுதிக்கும், தென்கீரனூர் ஊராட்சிதொடக்கப்பகுதிக்கும் இடையே இருந்த மண் சாலையை அப்பகுதி மக்களின் கோரிக்கையினை ஏற்று, நகராட்சியின் சார்பில் போர்கால அடிப்படையில் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டுள்ளதை மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார்.
இவ்வாய்வின்போது, கள்ளக்குறிச்சி நகராட்சி ஆணையர் குமரன், நகராட்சிபொறியாளர் பாரதி, துப்புரவு ஆய்வாளர் செல்வகுமார் மற்றும் நகராட்சிப்பணியாளர்கள் உடனிருந்தனர்.