கள்ளக்குறிச்சி அருகே கூத்தக்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், கூத்தக்குடி, பொரசக்குறிச்சி மற்றும் தென்கீரனூர்கிராமங்களில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார்  இன்று ஆய்வு மேற்கொண்டார்.

 கள்ளக்குறிச்சியை அடுத்த கூத்தக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புறநோயாளிகள் பிரிவில்,புறநோயாளிகளின் வருகைப் பதிவேடு, சிகிச்சை மேற்கொள்ள வரும் பொதுமக்களிடம் மருத்துவமனையில் அளிக்கப்படும் சிகிச்சை, பரிசோதனைமையத்தில் உள்ள இயந்திரங்களின் செயல்பாடுகள், மகப்பேறு பிரிவில் கர்ப்பிணிபெண்களுக்கு போதிய வசதிகள் ஆகியவை  குறித்து, ஆய்வு மேற்கொள்ளப்பட்டன.தொடர்ந்து, கூத்தக்குடி அரசு மாணவர்கள் விடுதியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு, குடிநீர் வசதி, கழிவறை வசதி, உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது, மாணவர்களுக்கு தரமான உணவும் விடுதியினைதூய்மையாக பராமரித்திட விடுதி காப்பாளருக்கு அறிவுறுத்தப்பட்டது.

பின்னர், பொரசாக்குறிச்சிநியாய விலைக்கடையில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் குடும்ப அட்டைதாரர்களுக்கு அனைத்து பொருட்களும் தரமாக வழங்கப்படுகிறதா, என்பது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது, மேலும் அனைத்து பொருட்களும் சரியான அளவீட்டில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கிட வேண்டும் என உத்தரவிடப்பட்டது. மேலும், தென்கீரனூர் தொடக்க வேளாண்மை கடன் கூட்டுறவு சங்கத்தில் உள்ள இ-சேவைமையத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, பொதுமக்களுக்கு வழங்கப்படும் அனைத்து சான்றுகளும் விரைந்து வழங்கிடவும், வழங்கப்படும் சான்றுகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

13 − = 3