கள்ளக்குறிச்சியில் 9 இடங்களில் குரூப்-1 தேர்வு: 2,950 பேர் பங்கேற்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தேர்வுமையத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு-1 (தொகுதி) தேர்வு மையத்தினை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு குரூப்-1 தேர்வு 9 இடங்களில் 16 தேர்வு கூடங்களில் நடைபெற்றது. இத்தேர்விற்கு 4 ஆயிரத்து 623 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 2 ஆயிரத்து 950 பேர் மட்டுமே கலந்து கொண்டு தேர்வு எழுதினர். இதில் விண்ணப்பித்திருந்த ஆயிரத்து 673 நபர்கள் தேர்விற்கு வரவில்லை.

இத்தேர்வு நடைபெறும் மையங்களில், தடையில்லா மின்சாரம், போக்குவரத்து வசதி, தீயணைப்பு பாதுகாப்பு, தேர்வு மைய வளாகத் தூய்மை, ஆயுதம் தாங்கிய காவலர் பாதுகாப்பு, நிலையான கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி முன்னேற்பாடு பணிகளுடன் தேர்வுகள் நடைபெற்றன.

மேலும், 2 பறக்கும்படை, 5 நபர்கள் கொண்ட 3 சுற்று குழுக்கள் கண்காணிப்பு பணிகளிலும், 50 காவலர்கள் பாதுகாப்பு பணிகளிலும் ஈடுப்படுத்தப்பட்டு வந்தனர். விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுதுவதற்கான அனைத்து முன்னேற்பாடு பணிகளும் மாவட்ட நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 4 = 1